பழனி அருகே உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதி
Mar 25 2023 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்த 7 ஆம் வகுப்பு மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பழனியை சேர்ந்த சவரத் தொழிலாளி கார்த்திகேயனின் மகன் ஹரிராம் நெய்க்காரபட்டியில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிப்பேருந்தில் இருக்கையை பிடிப்பதில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஹரிராமை சிசிடிவி இல்லாத அறைக்கு அழைத்து சென்ற பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக தெரியவந்தது. தனது மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்த போவதாக மாணவனின் தந்தை கூறினார்.