திருநெல்வேலியில் பெற்ற தந்தையை பராமரிக்‍காத 2 மகன்கள் கைது : இருவருக்‍கும் 3 மாத சிறை, ரூ.5,000 அபராதம்

Mar 27 2023 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநெல்வேலியில், தந்தையை கவனிக்காத இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர். நெல்லை மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு முத்துகிருஷ்ணன், முத்து மணிகண்டன், செண்பகநாதன், செந்தில் முருகன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். சுந்தரத்தை அவரது 2 மகன்களும் கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சுந்தரம் அளித்த மனுவை விசாரித்த ஆட்சியர் கார்த்திகேயன், தந்தைக்‍கு மாதம் தோறும் ஜீவனாம்சம் தர மறுத்த அவரது மகன்களான செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் ஆகிய இருவர் மீதும் நடவ​டிக்‍கை எடுக்‍குமாறு போலீசாருக்‍கு உத்தரவிட்டார். தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்காத செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இருவருக்கும் 3 மாத சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00