மாண்புமிகு அம்மாவுக்கு அரசு விழா : புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
Mar 30 2023 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் விழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த தலைவர்களுக்கு சிலை வைத்து, அரசு விழா எடுக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் புரட்சித்தலைவி அம்மாவிற்கு விழா எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தார். இதேபோல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், புதுச்சேரி தலைவர் செல்லா நாயக்கர் ஆகியோருக்கும் அரசு விழா எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.