சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்பு கதவுகள் : முதல் கட்டமாக 4வது வழித்தடத்தில் ரூ.100 கோடியில் தடுப்பு கதவுகள்
Mar 30 2023 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட 3, 4 மற்றும் 5வது வழித்தடங்களின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் நடைமேடைகளிலும் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வழித்தடம் 4ல் 100 கோடி ரூபாய் மதிப்பில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. வழித்தடம் 4ல் பூந்தமல்லியில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதி உயரத்திலான நடைமேடை தடுப்பு கதவுகள் அமைய உள்ளதாக மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.