நீலகிரியில் சாலையில் மகனுடன் சென்ற தந்தையை தாக்கிய காட்டுப்பன்றிகள் : நிலைதடுமாறி விழுந்த தந்தையை கண்டு கதறி அழுத சிறுவன்
Jun 1 2023 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையில் மகனுடன் நடந்து சென்ற தந்தையை காட்டுப்பன்றிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. செம்பாலா பகுதியில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு பன்றிகள், சாலையில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தன. திடீரென ஓட்டம் பிடித்த காட்டுப்பன்றிகள், சாலையில் மகனுடன் சென்ற தந்தையை மோதிவிட்டு ஓடிச்சென்றன. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த தந்தையை கண்டு, சிறுவன் கதறி அழுதான். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.