தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு : நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு. சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்
Jun 1 2023 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கனமழை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தென்தமிழக கடலோரப்பகுதி, இலங்கை கடற்பகுதி லட்சத்தீவு, மன்னார் வளைகுடா, வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 5-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.