கரூரில் கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறை சோதனை : அரசு ஒப்பந்ததாரர் மற்றும் வழக்கறிஞர் வீட்டிலும் சோதனை
Jun 1 2023 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரான கொங்கு மெஸ் சுப்பிரமணியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் கடந்த 26ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நண்பர் சுப்பிரமணி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே போல, மாயனூர் எழுதியாபட்டியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் பண்ணை வீடு மற்றும் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.