சேலம் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு : சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் நேரில் சந்திப்பு
Jun 3 2023 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல் கூறினார். சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் நேற்று பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி 3 பேர் உயிரிழந்தனர். அதில் படுகாயம் அடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்சியர் கார்மேகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டாசு விபத்தில் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.