திருவள்ளூர் அருகே 6 வழிச்சாலை பணிகளுக்காக அரசு ஏரியில் அதிக அளவில் மண் எடுப்பு : பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
Jun 3 2023 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 6 வழிச்சாலை பணிகளுக்காக ஏரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவு மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொக்லையன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 116 கி.மீ. தூரம் வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 6 வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட சின்ன செங்காத்தா குளம் பகுதியில் அங்குள்ள ஏரியில் குவாரி அமைக்கப்பட்டு சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு அனுமதித்த 3 அடி ஆழம் எடுக்க வேண்டிய நிலையில் 10 அடிக்கும் மேலாக மண் அள்ளப்படுவதாக குற்றம் சாட்டி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பொக்லைன் இயந்திரத்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.