ஒடிசா ரயில் விபத்து காரணமாக கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
Jun 3 2023 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் ஏற்பட்டுள்ள விபத்து காரணமாக கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட கோரமண்டல் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று திப்ருகரில் இருந்து ஏற்கனவே புறப்பட்ட கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று வழியில் இயக்கப்படும் என்ற அறிவிப்பையும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.