தேனியில் அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கும் வரை 144 தடை உத்தரவு : தவறான வீடியோ, போட்டோக்களை பதிவிட்டால் நடவடிக்கை
Jun 3 2023 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டத்தில் அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கும் வரை கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வெகுதொலைவில் எரசக்கநாயக்கனூர் காப்பு வனப்பகுதியில் யானை இருப்பதாகவும், 85 பேர் இரவு, பகலாக கண்காணித்து வருவதாகவும், மயக்க ஊசி போட்டு பிடித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வரும் நிலையில், யானை நடமாட்டம் குறித்து தவறான வீடியோ, போட்டோக்களை சமூக வலைதலங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.