வேலூர் அருகே கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது : 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை
Jun 3 2023 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காட்பாடி அருகே கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்னர். வேலூர் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது விற்பவர்கள் மீது மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து காட்பாடியை அடுத்த விருதம்பட்டு, சேனூர், வெண்மணி நகர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சேனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், வெண்மணி நகர் மோட்டூர் பகுதியை சேர்ந்த சிவா, விருதம்பட்டு பகுதியை சேர்ந்த சேட்டு ஆகிய 3 பேரை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.