திருச்சியில் 371 பெண் காவலர்களுக்கான பயிற்சி தொடக்கம் : 7 மாத பயிற்சிக்கு பின் போலீஸ் நிலையத்தில் பணி
Jun 3 2023 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 371 பெண் காவலர்களுக்கான பயிற்சி தொடங்கியது. தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள 8 பயிற்சி பள்ளிகளில் இவர்களுக்கு தற்போது பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 371 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து பயிற்சி முடித்த பெண் காவலர்கள் ஒரு மாத காலம் காவல் நிலையங்களுக்கு சென்று பயிற்சி பெறுவார்கள். 7 மாத பயிற்சி முடித்த பெண் காவலர்கள் போலீஸ் நிலையத்தில் பணி அமர்த்தபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.