திண்டுக்கல் அருகே குளத்தில் வீசி சென்ற பிறந்த சில நாட்களேயான பெண் சிசு சடலத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
Jun 3 2023 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பிறந்த சில நாட்களேயான பெண் சிசு குளத்தில் வீசி சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செட்டிநாயக்கன்பட்டியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மிகப்பெரிய குளம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை குளத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் சிசுவின் சடலம் மிதந்துள்ளதை கண்டு அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சிசுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.