ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு
Jun 5 2023 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி 2-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடை வெப்பம் காரணமாக ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக 7-ஆம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலிம் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.