ராமநாதபுரம் அருகே கொள்ளையர்கள் கடலில் போட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடும் பணி நிறுத்தம் : 3 நாள் தேடுதல் வேட்டையில் தங்கம் சிக்காததால் சுங்கத்துறை நடவடிக்கை
Jun 8 2023 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்ளையர்கள் கடலில் போட்டதாக கூறப்படும் தங்கக் கட்டிகளை தேடும் பணி நிறுத்தப்பட்டது. கடந்த 5-ம் தேதி பதிவெண் இல்லாத படகில் இலங்கையில் இருந்து வந்த 2 பேரை துரத்தி பிடித்த சுங்கத்துறையினர் அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்கக் கட்டிகளை கைப்பற்றினர். தப்பியோடிய 2 கொள்ளையர்கள், கடலில் மேலும் சில தங்கக் கட்டிகளை வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மண்டபம் அருகே இந்திய கடலோர காவல்படையின் ஸ்கூபா டைவிங் பிரிவினர், முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் தங்க கட்டிகளை தேடி வந்தனர். கடந்த 3 நாட்களாக கடலில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் தங்க கட்டிகள் எதுவும் சிக்காததை அடுத்து சுங்கத்துறையினர் தேடும் பணியை நிறுத்தினர்.