புதுக்கோட்டை ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழை : வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
Jun 8 2023 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஆலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆலங்காடு, கொத்தமங்கலம், கல்லாலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும் திடீரென பெய்த கனமழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.