கொடைக்கானல் அடுக்கம் பிரதான சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
Jun 8 2023 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் பிரதான மலைச்சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்ட வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்த அடுக்கம் பிரதான சாலையில் சீரமைக்கும் பணி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலையில் வத்தலக்குண்டு மலைச்சாலை வழியாக நீண்டு துரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மந்தகதியில் நடைபெற்று வரும் சாலையை பணியை துரிதகதியில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.