திண்டுக்கல் அருகே சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Jun 8 2023 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரளிபுதூர் ஊராட்சி பொடுகம்பட்டி தேசிய நெடுஞ்சாலை குண்டு குழியுமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றன. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும், மாவட்ட நிர்வாகிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வேம்பரளி சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.