ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி : நீச்சல் பழகுவதற்காக சென்றபோது நேர்ந்த சோகம்
Jun 8 2023 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நீலமங்கலம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர், தனது மகன் சஸ்வின் வைபவை அதே பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு, நீச்சல் பழகுவதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கிய சிறுவனுக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சஸ்வின் வைபவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.