கரூரில் 72 வயது முதியவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் : குற்றவாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல்
Jun 8 2023 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் முதியவர் எரித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயனூர் அடுத்த ராசாகவுண்டனூர் பகுதியில், கருப்பண்ணன் என்ற 72 வயது முதியவர், எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 24 மணி நேரம் கடந்தும், குற்றவாளியை கைது செய்யவில்லை என முதியவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், காந்தி கிராமம் பகுதி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.