மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை : பாஜக சாதனை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பு என தகவல்
Jun 10 2023 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 9-வது ஆண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை பா.ஜ.க. நடத்தி வருகிறது. வேலூர் பள்ளிக்கொண்டா அருகே கந்தநேரியில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக, இன்று இரவு சென்னை வரும் அமித்ஷா, கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.