சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு - வெயில் வாட்டி வதைத்த நிலையில் மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் கடும் அவதி
Jun 10 2023 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மின்சாரம் இல்லாமல் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நோயாளிகளின் உறவினர்கள் கை விசிறிகளை கொண்டு வீசி புழுக்கத்தை சமாளித்தனர்.
இதனிடையே ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டது குறித்து செய்தி சேகரித்த ஜெயா ப்ளஸ் செய்தியாளருக்கு மருத்துவமனை ஊழியர்கள் மிரட்டல் விடுத்தனர். மின்வெட்டு குறித்து வீடியோ எடுக்க விடாமல் செய்தியாளரை தடுத்து நிறுத்தி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரை கூட ஊழியர்கள் பயன்படுத்தவில்லை எனவும், மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் பணியில் இல்லை எனவும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விளம்பர திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே மின்வெட்டு தொடர்வதாக வேதனை தெரிவித்த பொதுமக்கள், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலியாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.