முதலமைச்சர் ஸ்டாலினுக்காக ஆபத்தான வகையில் பிரம்மாண்ட பேனர்கள் வைத்த தி.மு.க. உடன்பிறப்புகள் : பேனர் மறைக்கும் என்பதற்காக மரங்களை வெட்டி திமுக நிர்வாகிகள் அட்டூழியம்
Jun 10 2023 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக ராட்சத பிளக்ஸ் பேனர்கள் வைத்த தி.மு.க.வினர், மரங்களையும் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். ஸ்டாலினை வரவேற்கும் விதமாக நான்கு ரோடு, அண்ணா பூங்கா, பெரியார் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தொண்டர்கள் ராட்சத அளவில் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். பிளக்ஸ் பேனர்கள் மறைக்கும் வகையில் இருந்த மரங்களையும் தி.மு.க. நிர்வாகிகள் வெட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பிளக்ஸ் பேனர் விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சரை வரவேற்க தற்போது வைக்கப்பட்ட ராட்சத பேனர்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.