கள்ளக்குறிச்சி அருகே தனியார் தங்க நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்த நிறுவன அதிகாரிகள் 3 பேர் கைது

Jun 10 2023 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தனியார் தங்க நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மற்றும் போலி நகைகளை வைத்து 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சங்கராபுரத்தில் உள்ள இந்நிறுவனத்தில் தலைமை மேலாளரான ஏழுமலை, உதவி தலைமை அலுவலரான சின்ராஜ் மற்றும் இளநிலை உதவியாளரான ராஜசேகர் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் வருடாந்திர தணிக்கையில் ஈடுபட்டபோது ஏழுமலை உட்பட 3 பேர் சேர்ந்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்றது போல் போலி ஆவணங்களை தயார் செய்தும், லாக்கரில் இருந்த அசல் நகையை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்தும் 17 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வட்டார மேலாளர் சமதகிரி புகார் அளித்ததன் பேரில், ஏழுமலை, சின்ராஜ், ராஜசேகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00