கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி : சாமி கும்பிட சென்ற வேறு சமூக இளைஞரை வெளியே தள்ளிய சம்பவம்
Jun 10 2023 1:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வீரணம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் கடந்த 7ஆம் தேதி சாமி கும்பிட சென்ற வேறு சமூக இளைஞரை அனுமதிக்காமல் மற்றொரு சமூகத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் காளியம்மன் கோவிலை சீல் வைத்த குளித்தலை கோட்டாட்சியர் மற்றும் கடவூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சிறை பிடித்த விவகாரத்தில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த ஊர் முக்கியஸ்தர்களிடம், காளியம்மன் கோவில் சீல் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.