திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுகள் : மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
Jun 10 2023 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் நொளம்பூரில் சுடுகாட்டில் குப்பை கொட்டிய மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொளம்பூர் 143வது வார்டு பகுதியில் சுடுகாடு உள்ளது. கடந்த சில மாதங்களாக மாநகராட்சி ஊழியர்கள், சமூக விரோதிகள் என பலர் இங்கு குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு குப்பை கொட்ட வந்த மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.