காஞ்சிபுரம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் : வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கமும் எரிந்து நாசம்
Jun 10 2023 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் பகுதியில் கூலி தொழிலாளியான மணிமாறன் என்பவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. குடிசை எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும், கூலி வேலை செய்து சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணமும் முற்றிலும் எரிந்து நாசமானதாக கூலி தொழிலாளி மணிமாறன் வேதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.