சிறுவாணி அணை நீர்மட்டம் 1.5 அடியாக சரிவு : கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
Jun 10 2023 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதராமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்தாலும், வரும் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவாணி அணையில் தற்போது ஒன்றரை அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால், இதன் மூலம் அடுத்த ஒரு வாரத்துக்கு மட்டுமே மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாகவும், ஓரிரு நாட்களுக்குள் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.