அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய ஏ.ஆர்.டி ஜுவல்லரி உரிமையாளர்கள் கைது : ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
Jun 10 2023 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிக வட்டி தருவதாகக் கூறி ஏ.ஆர்.டி ஜுவல்லரி மோசடி செய்த வழக்கில் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல மாதங்களாக ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் வெளிநாட்டில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஏ.ஆர்.டி. ஜுவல்லரி இயக்குனர்களான ஆல்வின் மற்றும் ராபினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரையும் நொளம்பூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் மாலுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.