பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் : விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

Jun 10 2023 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் கல்வி ஆண்டில் சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு நான்கு மணிநேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாகவும், பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்குவதற்கு சனிக்கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களுக்கு பாட சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00