மயிலாடுதுறை அருகே 26 வயது கர்ப்பிணி பெண்ணை கணவர் வீட்டார் அடித்துக் கொன்றதாக புகார் : திருமணமாகி 3 ஆண்டுகளில் இளம்பெண் உயிரிழந்ததால் கோட்டாட்சியர் விசாரணை
Jun 10 2023 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை அருகே 26 வயதான கர்ப்பிணி பெண்ணை கணவர் வீட்டார் அடித்துக் கொலை செய்து தூக்கிலிட்டதாக பெண்ணின் உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலப்பாதி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சீர்வரிசை பொருட்களை கேட்டும், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது எனவும், காயத்ரியை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக பெண்வீட்டார் குற்றம்சாட்டியுள்ளனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளில் இளம்பெண் உயிரிழந்துள்ளதால், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யூரேகா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.