திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை : சேலம் அருகே திமுக பேரூராட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு
Jun 10 2023 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக பேரூராட்சி தலைவர் கண்டுகொள்வதில்லை என திமுக கவுன்சிலரே குற்றம்சாட்டியுள்ளார். மேச்சேரி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை, சாக்கடை வசதி உள்ளிட்டவை குறித்து, பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் மஞ்சுளா செங்கோட்டையன், திமுக ஆட்சியில் தங்கள் வார்டு பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என வெளிப்படையாகவே தெரிவித்தார்.