தேனி அருகே கோட்டாட்சியர் தலைமையில் பெயரளவுக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் : குறைதீர் கூட்டம் தொடர்பாக முன்னறிவிப்பு வெளியிட விவசாயிகள் கோரிக்கை
Jun 10 2023 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டத்தில் பெயரளவுக்கு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி, அரசுத்துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், விரல் விட்டு எண்ணும் அளவிற்கு கூட விவசாயிகள் பங்கேற்காத நிலையில், அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் குறைகளை கேட்டு தமிழக அரசுக்கு தெரிவிப்பதுதான் இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் எனக்கூறியுள்ள உழவர்கள், கடமைக்காக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். குறைதீர் கூட்டம் தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டால், அதில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.