கரூரில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதிய அரசுப்பேருந்து : ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததே விபத்துக்கு காரணம் என ஓட்டுநர்கள் விளக்கம்
Jun 10 2023 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் அதிகாலையில் வந்த அரசுப் பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. வேளாண்கன்னியிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து, கரூர் ராம் நகர் அருகே வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடுப்புச் சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால், இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதாக ஓட்டுநனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.