திண்டுக்கல் அருகே டூ-வீலரில் தனியாக சென்ற பொறியாளரை தாக்கி பணம் பறிப்பு : மது குடிப்பதற்காக வழிப்பறி செய்த நான்கு இளைஞர்கள் கைது
Jun 10 2023 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியாளரை தாக்கி பணம் பறித்த, நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பூபதி என்பவர் நேற்றிரவு வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் மின்நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், பூபதியை தாக்கி நான்காயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றது. அப்போது பூபதி கூச்சலிட்டதை அடுத்து, ரோந்து சென்ற காவல்துறையினர் இளைஞர்களை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், மது அருந்த பணம் இல்லாததால் தனியாக வந்த பூபதியை வழிமறித்து பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து நான்கு இளைஞர்களையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.