தேனியில் புல்வெளியில் அயர்ந்து தூங்கும் அரிசிக் கொம்பன் யானை : நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத்துறையினர் தகவல்
Jun 10 2023 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனியில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக் கொம்பன் யானை, கோதையாறு மேல் அணை பகுதியில் உள்ள புல்வெளியில் உறங்கிக் கொண்டிருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி அதிகாலை பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை, களக்காடு முண்டந்துறை வனபகுதியில் உள்ள முத்துக்குழி வயல் என்ற இடத்தில் விடப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே யானை வழித்தடம் இருப்பதால், அந்த வழியாக அரிசிக்கொம்பன் யானை அதன் பூர்விகமான கேரள மாநிலத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும், அரிசி கொம்பன் யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.