கிருஷ்ணகிரி அருகே நிவாரணம் வாங்கி தருவதாக கூறி பணம் பறித்த போலி அதிகாரிக்கு போலீசார் வலை வீச்சு
Jun 10 2023 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான குழந்தை குடும்பத்துக்கு நிவாரணத்தொகை வாங்கி தருவதாக கூறி, பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஒட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரின், 4 வயது மகள் கோமதி, பிறவி கண் பார்வை குறைபாடு இருந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை அறிந்து அரசு அதிகாரி போல் வந்த ஒரு நபர், நிவாரணம் வாங்கி தருவதாகக்கூறி திருப்பதியிடமிருந்து 5 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்றுள்ளார். மேலும், திருப்பத்தியை தொடர்புக்கொண்டு 20 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும், அதனை அரசுக்கு ஜி.எஸ்.டி-யாக கட்டி விட்டால், நிவாரணம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த திருப்பதி அந்த நபரை பற்றி விசாரித்தபோது போலியானவர் என தெரியவந்தது. இதனையடுத்து திருப்பதி அளித்த புகாரின் பேரில், போலி அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.