சிவகங்கை அருகே காட்சி பொருளாக இருந்து வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி : உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
Jun 10 2023 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனாம்பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீர் உப்பாக இருப்பதால், குடிநீருக்காக அப்பகுதி பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டு வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேல் நிலை நீர் தேக்க தொட்டியை கட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் காட்சி பொருளாக இருந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம்ச்சட்டியுள்ளனர். எனவே, நீர் தேக்க தொட்டியை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.