ஈரோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது கழன்று ஓடிய லாரியின் பின்புற டயர் - சிசிடிவி காட்சி வெளியீடு
Jun 10 2023 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் டயர் கழண்டு விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோட்டை தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியின் பின்புறம் டயர் திடீரென சுழண்டு விழுந்து சாலையில் ஓடியது. லாரியின் பின்னால் வாகனங்கள் ஏதும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.