சிவகங்கை அருகே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர் - சிசிடிவி காட்சி வெளியீடு
Jun 10 2023 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை திருடும் இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வள்ளுவர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர், செக்காலை என்ற இடத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது, திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை திருடியது தெரியவந்தது.