காஞ்சிபுரம் அருகே சவுடு மண் லாரிகளை சிறைபிடித்து கிராமத்தினர் போராட்டம் : தரைபாலம் வழியாக லாரிகள் செல்லக்கூடாது என வாக்குவாதம்
Jun 10 2023 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் அவளூர் தரைப்பாலம் வழியாக சவுடு மண்ணை ஏற்றி வரும் லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவாண்டதண்டலம் பகுதியிலுள்ள சவ்வூடு மண் எடுக்க பொதுபணித்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மண் வாலாஜாபாத் அவளூர் தரைபாலம் வழியாக 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் செங்கல்பட்டு, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கிருந்த தரைப்பாலம் பலவீனமான நிலையில் கடந்த பருவ மழையின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தற்காலிக தரைப்பாலத்திலும் லாரிகள் சென்று வருவதை கண்டித்து கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.