திருப்பூர் அருகே வேட்டை நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு : கோட்டாட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
Jun 10 2023 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வேட்டை நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர், தாந்தோணி உட்பட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக வேட்டை நாய்கள் கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. இந்த நிலையில் இந்திரா நகர் பகுதியில் சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட ஆடுகளையும், கன்று குட்டியையும் வேட்டை நாய்கள் கடித்து குதறி உள்ளன. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் தரப்பில் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வத் கண்ணனை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.