தூத்துக்குடி அருகே டீக்கடைக்கு ரூ.61,000 மின் கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சி : ஊழியர்கள் மின் கட்டணத்தை கட்ட வற்புறுத்துவதாக உரிமையாளர் வேதனை

Sep 22 2023 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே டீக்கடைக்கு 61 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். வல்லநாடு புத்தனேரியைச் சேர்ந்த பூபதிராஜா, புதிய மின் இணைப்புடன் டீக்கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், டீக்கடைக்கு இந்த மாதத்திற்கான மின்கட்டணம் 61 ஆயிரம் வந்துள்ளதாக மின் ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜா மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே, கட்டணத்தை கட்டவில்லை என்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என்று மின்வாரிய ஊழியர் எச்சரித்துள்ளார். மீட்டர் வேகமாக ஓடுவதாக ஏற்கெனவே மனு அளித்தும் அதை ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் 61 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என வற்புறுத்துவதாக பூபதி ராஜா வேதனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00