A.R. ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு : நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ACTC நிறுவனத்தாரிடம் போலீசார் விசாரணை
Sep 22 2023 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்ற, A.R. ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த, ACTC நிறுவனத்தின் இயக்குநர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், ACTC நிறுவனம் 20 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டும் இருக்கைகள் அமைத்துவிட்டு, சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த குளறுபடி தொடர்பாக புகார் எழுந்த நிலையில், ACTC நிறுவனத்தின் இயக்குநர் ஹேமந்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ், கானாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டார்.