நீதிமன்றம் உத்தரவிட்டபடி 19ஆம் தேதி ஏன் சொத்துபட்டியலை தாக்கல் செய்யவில்லை என விஷாலுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி : தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என காட்டம்

Sep 22 2023 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத நடிகர் விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்ககூடாது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தை விட தான் பெரியவன் என நினைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

21 கோடி ரூபாய் பணத்தை திரும்ப தராத விவகாரத்தில் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

வங்கி கணக்கு மற்றும் சொத்து விவரங்களை நடிகர் விஷால் வரும் 19-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணைக்காக விஷால் மீண்டும் நேரில் ஆஜராகியிருந்தார். சட்டத்தை விட மேலானவர் என நினைக்கிறீர்களா? உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? என நீதிபதி P.T ஆஷா கேள்வி எழுப்பினார். இந்த நீதிமன்றத்திற்கு அனைவரும் சமம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தாமாக முன்வந்து எடுக்க கூடாது? என நீதிபதி காட்டமாக கேட்டார்.

உடனே விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். நீதிமன்ற உத்தரவை பின்பற்றக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே விஷால் இவ்வாறு செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார். தற்போது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால் வழக்கறிஞர் மூலம் உத்தரவை பெற்றுவிடலாம் என ஒவ்வொரு மனுதாரரும் நினைக்க தொடங்கிவிடுவார்கள் என்று நீதிபதி சுட்டிக்‍காட்டினார். தன்னிடம் 3 கார், ஒரு பைக் இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளதுடன், தமக்கு இருக்கும் ஒரு வீடும் அடகில் இருப்பதாக சொத்து விவரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு வருடமாக நடிக்கிறார், இன்னும் அவருக்கு லோன் இருப்பதாக கூறுகிறீர்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அண்ணா நகரில் இருக்கும் வீடு சொத்து விவரத்தில் சேர்க்கப்படவில்லை என்று லைகா தரப்பு வழக்கறிஞர் கூறினார். அந்த வீடு தம்முடையது அல்ல என்றும், அந்த வீடு கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் விஷால் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்‍கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00