மதுரையைச் சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி வி.கே.குருசாமி சரமாரியாக வெட்டப்படும் பரபரப்பு காட்சிகள் வைரல்
Sep 22 2023 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையைச் சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி வி.கே.குருசாமி சரமாரியாக வெட்டப்படும் பரபரப்பு காட்சிகள் வைரலாகி உள்ளன. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த மாநகராட்சி திமுக முன்னாள் மண்டலத் தலைவரான வி.கே. குருசாமி, கடந்த 4 ஆம் தேதி பெங்களூரு பனஸ்வாடியில் உள்ள உணவகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் குருசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதனையடுத்து குருசாமி மீட்டுகப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கார்த்திக், வினோத்குமார், பிரசன்னா ஆகிய மேலும் 3 பேரை பனஸ்வடி போலீசார் கைது செய்துள்ளனர்.