தமிழ்நாட்டில் சிறு குறு தொழில் நிறுவனங்களை அழிக்கும் வகையில் செயல்படும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் : உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தல்

Sep 25 2023 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழிக்‍கும் வகையில் செயல்படும் திமுக விளம்பர அரசுக்‍கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறு, குறு தொழில் அமைப்பினரின் நியாயமான கோரிக்‍கைகளுக்‍கு செவி சாய்த்து, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் - 430 சதவீத நிலைக்‍கட்டணம், பீக்‍ ஹவர்ஸ் கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க்‍ கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்து, அவர்களின் போராட்டத்தை உடனே முடிவுக்‍கு கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை, புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், திமுக தலைமையிலான அரசு, சிறு, குறு தொழில் அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெறுவதோடு, 430 சதவீத நிலை கட்டணம், பீக் ஹவர்ஸ் எனப்படும் பரபரப்பு நேர கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து அவர்களின் போராட்டத்தினை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

திமுகவின் 28 மாத ஆட்சியில் இரண்டு முறை மின் கட்டணத்தை உயர்த்தியதால், தமிழக மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு அளவே இல்லை என்பதை எண்ணி மிகவும் வேதனையடைகிறேன் - புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் வீடுகள், கடைகளில் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துகிறவர்கள் 170 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், இன்றைக்கு திமுக ஆட்சியில் 55 ரூபாய் கூடுதலாக சேர்த்து 225 ரூபாயாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் - அதிலும் குறிப்பாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலையோ தமிழகத்தில் மிகவும் பரிதாபகரமாக, யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைமையிலான அரசு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 1 யூனிட்டுக்கு 1 ரூபாய் 30 பைசா அளவுக்கு 20 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியுள்ளது - அதாவது, புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் 1 யூனிட்டுக்கு 6 ரூபாய் 35 பைசாவாக இருந்த மின்கட்டணத்தை, திமுக ஆட்சி வந்தவுடன் முதல் முறையாக கடந்த ஆண்டு 1 யூனிட்டுக்கு 7 ரூபாய் 50 பைசாவாகவும், இரண்டாவது முறையாக 7 ரூபாய் 65 பைசாவாகவும் கடுமையாக உயர்த்தினர் - மேலும், நிலைக்கட்டணத்தை வரலாறு காணாத வகையில் 430 சதவீத அளவுக்கு உயர்த்தி தொழில் துறையினரின் தலையில் பேரிடியை இறக்கினர் - அதாவது புரட்சித் தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் 3 ஆயிரத்து 920 ரூபாய் என்ற அளவில் நிலைக்கட்டணம் செலுத்தியவர்கள் இன்றைக்கு திமுக தலைமையிலான ஆட்சியில் 17 ஆயிரத்து 200 ரூபாய் அளவுக்கு நிலைக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது - மேலும், புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் பீக்‍ ஹவர்ஸ் எனப்படும் பரபரப்பு நேர கட்டணம் என்று எதுவும் சிறு, குறு நிறுவனங்களுக்கு கிடையாது - இப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரபரப்பு நேர கட்டணத்தை புதிதாக கொண்டு வந்து தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முற்றிலுமாக முடங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபோன்று திமுக தலைமையிலான அரசு மனசாட்சியின்றி உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்றைக்கு தமிழகம் முழுவதும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பினர் உற்பத்தி நிறுத்த போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - திமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெறவேண்டும், பரபரப்பு நேர கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டமும், உண்ணாவிரத போராட்டமும் செய்து வருகின்றனர் - இதனால் மாநில அளவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது - இதில் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் குறிப்பாக உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், சாய சலவை பட்டறைகள், மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட 36க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று உற்பத்தி நிறுத்தம் செய்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் - இதன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் - மேலும், இன்று ஒரு நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதித்துள்ளதாகவும், சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிறு குறு தொழில் அமைப்பினர் போராட்டத்திற்கு அனுமதி கேட்டவுடன், தமிழக முதல்வர், தொழில்துறைக்கு எந்த வகையிலும் பயனளிக்காத வகையில் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் பளுவினை குறைத்துக்கொள்ளவும், உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் - இதனை ஏற்க மறுத்த மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தங்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் தமிழக முதல்வரின் அறிவிப்பில் இடம்பெறவில்லை என்று தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர் - தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்‍காட்டியுள்ளார்.

இவ்வாறு தொழில் நிறுவனங்கள் கதவடைத்து போராட்டம் செய்வதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது - எனவே, ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறுவதோடு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நியாமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00