தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் : பொய்யான வாக்குறுதிகளை கூச்சமில்லாமல் அளித்து மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம் என சாடல்

Sep 28 2023 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக மக்‍களுக்‍கு அளித்த தேர்தல் வாக்‍குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாகவும், தங்கள் வாக்‍குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக, வாய் கூசாமல் வடிகட்டிய பொய்யைச் சொல்லி வருவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் இளம் சமுதாயத்தினரைப் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்த்து, தமிழகத்தில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் திமுக அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், திமுக தலைமையிலான அரசு, தனது 28 மாத கால ஆட்சியில் 12 ஆயிரத்து 576 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கியுள்ளதாகவும், தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசு பணி வழங்கப்படுவதாகவும் திமுக தலைவர் மேடை போட்டு பேசுகிறார் என தெரிவித்துள்ளார். ஆனால் திமுகவினர் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னவென்றால், அரசுத்துறைகளில் 5 புள்ளி ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் - தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் - மேலும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர் - குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றெல்லாம் கடந்த தேர்தலின்போது திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கூச்சமில்லாமல் அளித்து தமிழக மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இனி மீதம் இருக்கும் காலத்திலாவது மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பூர்த்திசெய்து நம் இளம் சமுதாயத்தினரின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிவிடுவார்கள் என்று நினைத்தால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று உறுதியளித்திடும் வகையில், தற்போது திமுக தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் - அதாவது, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் நபர்களுக்கு அரசுப் பணி தருவதாக திமுக தலைவர் பேசி இருக்கிறார் - எனவே, அரசுத்துறைகளில் 5 புள்ளி ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று திமுகவினர் தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பொய்யானது என்பது தற்போது நிரூபணம் ஆகிவிட்டது என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் வாய் கூசாமல் 100 சதவீதம் தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைப்பது போன்று, ஒரு வடிகட்டிய பொய்யை சொல்லி இருந்தார் என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மை நிலை என்னவென்றால், திமுகவினர், அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் முழுமையாக நிறைவேற்ற வில்லை என்றும், அதில் ஒரு சிலவற்றை தமிழக மக்களுக்கு எடுத்துக்கூற, தான், கடமைப்பட்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு ரத்து, குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, கல்விக்‍ கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து பயிர்கடன், நகைக்கடன் முழுவதும் தள்ளுபடி, நெல்லுக்கான ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தரப்படும், கரும்புக்கான ஆதார விலை 4 ஆயிரம் ரூபாய் தரப்படும், கச்சத்தீவு திரும்ப பெறப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும், அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் தானியங்கி மெஷின் வழங்கப்படும், வீடுகளுக்கு 2 மாத மின் கட்டணத்திற்கு பதிலாக மாதம் ஒரு முறை மின் கட்டணம், ரேஷன் கடைகளில் மாதம் 1 கிலோ கூடுதலாக சர்க்கரை, மகளிர் திருமண உதவி 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெட்டியில் போட்ட கோரிக்கை மனுக்‍களுக்கு தீர்வு காணப்படும் - இவை அனைத்தும் திமுகவினர் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என, புரட்சித்தாய் சின்னம்மா புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். இவற்றை எப்போது நிறைவேற்றினார்கள்? என்பது தமிழக மக்களுக்கே வெளிச்சம் - ஆனால் திமுகவினர் 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சொல்லி அடுத்த தேர்தலுக்கு இப்போது தயாராகி வருகின்றனர் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுகவினர், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அளித்து அவர்களுடைய வாக்குகளையும் பெற்று ஆட்சியில் அமர்ந்துகொண்டு இன்றைக்கு அவர்களையும் கண்டுகொள்வதில்லை - இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்றும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்றும் தற்போது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 621 எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு செய்து அதற்கான தேர்வுகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, தற்போது அதன் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன - வெளியான தேர்வு முடிவுகளை பார்த்த தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள் - அதாவது அடுத்தடுத்த பதிவு எண்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளதாக இருப்பதால், தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று தேர்வர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் - குறிப்பாக தேர்வு அறையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர் - எனவே இந்த தேர்வில் ஏதேனும் தவறுகள் நடைபெற்று இருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, காவல்துறையில் பணியாற்ற விரும்பும் இளம் சமுதாயத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, முறையற்ற வகையில் நடந்த இந்த தேர்வினை ரத்து செய்து விட்டு, மீண்டும் நேர்மையான வகையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வினை நடத்த வேண்டும் என்று புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

எனவே, திமுகவினர் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையில், தமிழக இளம் சமுதாயத்தினரைப் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00