தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் : டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை தாமத நடவடிக்கை
Oct 1 2023 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் இன்று நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக 23 ஆயிரத்து 717 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 524 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 363 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். காய்ச்சல் வந்தால் உடனடியாக ரத்த மாதிரி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.